என்னவள்
பாடும் கவிஞன் நான்
என்னவளை ரவிச்சந்திரிகா
என்ற ராகம் பெயர்க்கொண்டு
கவிதை புனைவேன்,
ரவியின் கம்பீரமும்.
சந்திரனின் குளுமையும்,
சேர்ந்தால் எப்படியோ அப்படி
ஒரு மனதிர்க்கோர் அனுபவம் தரும்
வினோத ராகம் அது, அதுபோல
என்னவள், உதய சூரியனின்
தங்க நிறம்கொண்டு
தக தக என்று ஒளிர்ந்தாலும்
கட்டி அணைத்த போதிலும்
தொட்டு உறவாடி
காதல் மொழி பேசிய போதிலும்
சந்திரனின் குளிர் தந்து
மனம் மகிழ வைப்பாள்
ரவிசந்திரிகா ராகம் போலே
ரவியின் பயணம் பகலில்
சந்திரனின் பயணம் இரவினில்
இவை இரண்டும் சேருவது எப்போது?
அந்த இரண்டும் சேர்ந்த ராகத்தில்
அதன் தன்மையில் சேர்ந்து உறவாடும்
என்னவளின் காதல் கனிரசத்தில்.
அதனால் அவள் என் ரவிசந்திரிகா .