உன் கோபமே உனக்கு அழகு

உன் கோபமே உனக்கு அழகு


உன் முகத்தில் பிரகாசிக்கும் சிரிப்பை விட
உன் முகத்தில் ஜொலிக்கும் கோபத்தை தான்
அழகாய் இரசிக்கிறேன்...

நான் உன்னை பின் தொடரும் ஒவ்வொரு
நோடியும் அழகாய் நடக்கிறாய்...

நீ என்னை பற்றி நினைக்கும் ஒவ்வொரு
நிமிடமும் அழகாய் சிந்திக்கிறாய்...

நான் உன்னையும் நீ என்னையும் பார்க்கும்
பொழுதெல்லாம் அழகாய் பார்க்கிறாய்...

நான் உன்னிடம் பேச நெருங்கும் போது
நிலவை விட அழகாய் திகழ்கிறாய்...

கோபம் தான் உனக்கு அழகு...

என்றும் உன் அழகை வற்றவிடாமல்
உன்னையே பின் தொடர்கிறேன்...

எனக்காக அல்ல
உன் அழகான கோபத்துக்காக...


- சுரேஷ்

எழுதியவர் : சுரேஷ் (29-Mar-18, 10:23 am)
பார்வை : 401

மேலே