நமது புராண-இதிகாசங்கள்

மஹாபாரதத்தில் ஒரு நிகழ்ச்சி
கண்ணனைக் கொல்ல
மாமன் கம்சன் அசுரன் ஒருவனை
கொக்கு உருவத்தில் அனுப்ப
குழந்தை அவன் கொக்கினை அணுக
கொக்கு விழுங்கிவிடுகிறது குழந்தையை
ஒரு சில நாழிகை உலகமே இருண்டது!
ஆம், உண்மையை, 'பொய்' விழுங்கிவிட
மெய்யோ (கண்ணன்) பொய்யய் உள்ளிருந்து
தகிக்க, பொய் மெய்யை ஜெயிக்க முடியாது
உமிழ, மாமாயன் கண்ணன் பொய்யின் வாயை
பிளக்க பொய்யாம் கொக்கு இறக்கிறது!
மெய், மெய்யாய் கண்ணனாய் மீண்டும் உலாவ,
இப்படி இதிகாசங்கள் பிள்ளைகளுக்கும்
புரியவைக்க உண்மை நிகழ்ச்சிகளை
கதைபோல் புனைகின்றன
இதிகாசம் படிப்போம்,மகிழ்வோம்
குழந்தைகளுக்கு அதன் உட்கருத்துக்களையும்
சேர்த்து புரியவைப்போம்
அர்த்தமுள்ள இந்து மதம்
அர்த்தமுள்ள இதிகாச,புராணங்கள்
நம் நாட்டின் பொக்கிஷங்கள்
உலகுக்கும் இதன் பெருமையை
புரியவைப்போம்!

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (31-Mar-18, 7:36 am)
பார்வை : 251

மேலே