புன்னகையைக் கொட்டிச் சென்றாள்
புன்னகையைக் கொட்டிச் சென்றாள்
நான் கவிதைகளை அள்ளி அள்ளி எடுக்கிறேன் !
கருங் கூந்தலை அவிழ்த்து விட்டாள்
காளி என்று நீங்கள் சொல்லலாம்
நான் கார்முகில் ஆடக் காண்கிறேன் !
பார்வை அலைகளை மிதக்கவிட்டாள்
பாயும் நதிகள் நிற்கக் கண்டேன் !