பரிச்சவாலு

ஏன்டா கண்ணு பரிச்சவாலு தலையைத் தொங்கப் போட்டுட்டு வர்ற?
😊😊😊😊😊
போங்க பாட்டிம்மா நான் இன்னிக்குத் தேர்வை நல்லாவே எழுதல.
😊😊😊😊😊
ஏன்டா சாமி, என்னடா ஆச்சு?
😊😊😊😊😊
நாந் தான் சரியா படிக்காம வாலுத்தனம் பண்ணீட்டு திரியறவன். எட்டாம் வகுப்புவரை இலவசத் தேர்ச்சி. ஒன்பதாம் வகுப்புத் தேர்வை நாலு பக்கமும் உட்கார்ந்து தேர்வு எழுதன பசங்களப் பாத்து எழுதித் தேர்ச்சி பெற்றேன். இப்ப பத்தாம் வகுப்புத் தேர்வு. பறக்கும் படை, ஊரும் படை, நகரும் படைன்னு அனுப்பி வச்சு பாத்து எழுதிப் பழக்கப்பட்ட எங்களைக் கடுமையா கண்காணிக்கறாங்க. என்னச் சுத்தி இருந்த பசங்கள்ல ஒருத்தன்கூட அவனோட விடைத் தாளை எனக்குக் காட்டல. இதெல்லாம் கல்வித் துறை பண்ணற அட்டகாசம். தாங்க முடிலீங்க பாட்டிம்மா.
😊😊😊😊
ஏன்டா உங்கப்பன் உனக்கு 'பரிச்சவாலு'- ன்னு பேரு வச்சான்? நீ படிக்காம போயி. பரிச்ச எழுதுவே.
உன்னையெல்லாம் முட்டிக்கு முட்டி தட்டி வளத்திருந்தா ஒழுங்காப் படிச்சிருப்பா. பேருக்குத் தகுந்த வாலுத்தனம் மட்டும் ஒழுங்காச் செய்யறீடா பரிச்சவாலு.
😊😊😊😊😊😊
என்னங்க பாட்டிம்மா எம் பேர எப்பப் பாத்தாலும் கிண்டல் பண்ணறீங்க?
எம் பேரு பரிஜ்வால்.
😊😊😊😊😊
ஆமாம்டா, கெச்சிரிவாலு, காச்சல் அக்கறவாலு மாதிரி நீ பரிச்சவாலு. நீயும் ஒரு காலத்தில முதலமைச்சர் ஆகப்போற இல்லன்னா நடிகனாகப் போற.
😊😊😊😊😊
உங்க வாழ்த்துப்படி நடந்தா சரீங்க பாட்டிம்மா.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■ ■■■■■■■■■■■■■■■■■■■■■
திரைத் தமிழைத் தவிர்ப்போம்.
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆●●◆●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●
சிரிக்க அல்ல. சிந்திக்க. மொழிப் பற்றை வளர்க்க.
●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●
Parij = never been conquered
முன்னாள் பிரதமர் தேவே கவுடா அவர்களின் பேரன் பெயர் (Parijwal) பரிஜ்வால்.

எழுதியவர் : மலர் (31-Mar-18, 9:45 pm)
பார்வை : 104

மேலே