முயற்சி
வறுமையின் விந்தில் பிறந்தவன் நான்
ஆதலால் துன்பம் புதிதல்ல !
தோல்வியின் விளிம்பில் வளர்ந்தவன் நான் ஆதலால் கண்ணீர் புதிதல்ல !
இழப்பின் எல்லையில் வாழ்ந்தவன் நான் ஆதலால் ஏமாற்றம் புதிதல்ல !
கனவுகளை விழிகளில் மட்டும் சுமப்பவன் நான் ஆதலால் ஏக்கம் புதிதல்ல !
வெற்றியின் வாயிலில் துரோகம் பல கண்டவன் நான் ஆதலால் மாற்றம் புதிதல்ல !
அறிவின் ஓட்டம் மறியும்வரை ஏற்றம் பல மறவாதே !
சுவை உணரும் நாவும் நஞ்சை வெளியிடும் கவணம்கொள் !
சோதனை ஈன்றா சாதனையில்லை உன்னில் விதையிடு எண்ணம் உரமிடு அறிவின் துனைகொடு வெற்றியை சுவைத்திடு !
இவன்
இரா.விஸ்வநாதன்