சுமந்தவளின் சுகம்

என் அம்மா :

" அழுதா பால் கொடுப்பா
முத்தத்துல முகம் நனைப்பா
நான் உறிஞ்சும் பாலுல
குடிச்ச சுகம் அவ அனுபவிப்பா
தம்புள்ள பேர சொல்லி தானே சிரிச்சிக்குவா
என்ன பாத்து பலர் ரசிச்சா
கண்ணுப்பட்டு போய்டுமுனு
கண்ணு முடி சுத்திப்போட்டு
கன்னத்தை பொத்தி அணைப்பா ............

தனக்கென வாழாது தவமாய் தவம் கிடந்து
தன் நிலை அறியாது
பெற்றெடுத்த பிள்ளைகளை
சொட்டு நீர் சொட்ட விடாமல்
பட்டு போல் எம்மை பார்த்து
பஞ்சி மெத்தையில் படுக்கவச்சி
தாலாட்டி தன் பசி ஆத்திகுவா

சோர்வடைஞ்சி பாத்ததில்லை
எனக்கு சோறு போட மறுத்ததில்லை
அஞ்சோ அறுபதோ
இருக்கும் வரை சிறு பிள்ளைதான் இவளுக்கு நான்

ஆச தீர வாரி அணைப்பா
அதில் ஆச்சு வெள்ளம் சுகம் இருக்கும்
தான் உண்ட சோத்துல மிச்சம் மீதி மீந்திருந்தா
வாய் சுவைக்க உண்டு தீர்ப்பா
கொஞ்ச நேரம் காணலனா
பதறி போய் அழுதிடுவா
கோவப்பட்டு பேசலனா
ஒரு மூலையில முடங்கிடுவா

அவ நெல்லா தல வாரி பாத்ததில்லை
அவ நெல்லா சோறுண்டு பாத்ததில்லை
அவ சிரிச்சி பாத்ததில்லை
அலங்காரம் பண்ணதில்ல
எங்களை நினைக்க மட்டும் மறந்ததில்லை


உறக்கம் என்றால் இவள் மடி
என்றும் இவள் சரனடி ..............
மொத்தத்துல தாய் பாசம் தீராதது
அது என்றும் சீரானது ...... "

எழுதியவர் : அருண் பிரசாத் த (1-Apr-18, 11:29 am)
பார்வை : 1012

மேலே