பாடல் 3
இவன் தந்திரன் திரைப்படத்தின்
"Medhakkavitta" பாடலின்
ராகத்திற்கு நான் எழுதிய
வரிகள்
பெண்:
எனை தவிக்க விட்ட...தவிக்க விட்ட
குறிஞ்சிமலர் போல...
இனியும்...தாமரை மேல
நீரப் போல
ஒதுங்கிப் போகாத...
தவில் அடிக்க விட்ட
அடிக்க விட்ட...
மனதில் இசைமேட
சோகப் பாட்டே கேட்குதெனினும்
வாட்டி வதைக்காத...
விழி இல்லாது இருள் புகுந்தாலும்
செவி அல்லாத நிலை அடஞ்சாலும்
விழி இல்லாமலும்.... செவிஅல்லாமலும்...
உனை நான் உணர்வேனே...
கல்லாகிப் போனதென் இதயம்
அது கல்வெட்டு செய்யவே தேறும்
உன் பெயரினை நீ
அதில் பதிந்திடவே
மலராய் உருமாறும்
ஆண்:
அடி
என்னால கண்ணீர்-நீ
சிந்தாதடி
உன்கண்ணாளன் நானே -நீ
வருந்தாதடி
நெஞ்செல்லாம் நீயேதான்-
தயங்காதடி
நாம் ஒன்றாகச் சேர்வோம்-நீ
கலங்காதடி
தனிமையின் பிடியில
சிக்காதடி
பாரத்த மனசுக்குள்
வைக்காதடி
தனிமையின் பிடியில
சிக்காதடி
ந-ீபாரத்த மனசுக்குள்
வைக்காதடி
எத்தனைய துன்பத்ததான்
உனக்குள்ளே வச்சுருப்ப
இனிமேலும் மனசிங்கு
தாங்காதடி
அத்தனையும் மறஞ்சிடும்
மேகமா கலஞ்சிடும்
நம் காதல் சாகாதடி
உனை தவிக்க விட்டேன்
தவிக்க விட்டேன்
குறிஞ்சிமலர் போல
இனி தாமரை மேலும்
நீரும் தேங்கும்
வதங்கிப் போகாத...
தவில் அடிக்க விட்டேன்
அடிக்க விட்டேன்
மனதில் இசைமேட
காதல் பாட்டே கேட்குமினிமே
பினியில் வாடாத...