பூக்களின் புன்னகை
பூக்களின் தேசத்தில்
புன்னகைக்கு பஞ்சமில்லை
தனித்த வாசனையை
எப்படித் தேடுவேன் ?
பட்டாம்பூச்சியின்
சிறகடிப்பில்
படபடக்கத்தானே செய்யும்
ஒரு பூவின் மனம்
வண்ணங்களால் நிறையும்
பூங்காவில்
காற்றாய் நுழைவது
பரவசம்
தேன்கொடுக்கும் பூக்களுக்கு
முத்த வருமானம்
கண்களுக்கு விருது தருவதில்
பூக்களை யாரும்
மிஞ்சமுடியாது
பேசிவிட்டுப் போகும்வரை
தலையசைக்கும் பூக்கள்
வந்து வந்து போகின்றன
கனவுகளிலும்
நறுமணப் பூக்கள்
பெறுகின்றன
கூந்தல் சிம்மாசனம்
காகிதப்பூக்கள்
கவலைப்படுவதில்லை
மலர்ந்துகொண்டுதானிருக்கின்றன !