வறுமை தந்த வலிகள்
சுடும் வெயிலும் கடும் மழையும் வறுமைக்கு தெரியாது …
ஒரு வாய் பருக்கையும், உதட்டோரத்தில் விரக்தியின் சிரிப்பும்..
வறுமை கொடியின் சின்னங்கள் ….
கிழிந்த துணியும் , அதை தேடி செல்லும் கிண்டல்களும்..
வறுமை உச்சத்தின் எதிர் ஒலிகள் …
பத்து ரூபாயை பார்த்து விட்டால் பரவசம் அடையும் என் மனதிற்கு
அப்போது பாவம் தெரியவில்லை …
அது பணக்காரர்களின் அகங்காரத்திற்கு கிடைத்த புகழ் என்று …
பசும் பாலை பார்த்து பல நாட்களும்,
பருப்பு பார்த்து பல வருடங்களும் ஆன ஏக்கம்
அன்று என் கண்களிலும் வயிற்றிலுமே தெரிந்தது …
மஞ்சள் பையோடு மாமா வீட்டிலோ அத்தை வீட்டிலோ
அரிசிக்காக நின்ற பொது எரிந்தது நெருப்பு..
உலையினில் மட்டும் அல்ல .. என் நெஞ்சிலும் தான் …
மாத கணக்காய் சேர்த்து வைத்த சிறு தொகையும்
சின்னாபின்னமாய் எரிந்து போனது கடன்காரனின் சிகரெட்டிற்காக…
சிறிய வயதிலே விளையாடும் விளையாட்டுகளும் ஆட தோன்றியது இல்லை ..
என் வாழ்க்கையில் விதி விளையாடியதால் …
கேலி செய்யும் உறவுக்கும், கேள்வி கேட்கும் கடன்காரர்களுக்கும்
பதிலாய் என் கண்ணீர் மட்டுமே …
என் கண்ணீரோடு நானும் மூழ்கி விடலாம் என்று கடலுக்கு சென்றேன் ..
கடமைகள் என்னை கடற்கரை மணலில் இழுத்து போட்டன …
அன்று.. வருத்தங்கள் அத்தனையும் மூட்டையாய் கட்டி மனதில் சுமந்து கொண்டு..
நகர்கிறேன் இன்று வரை …
வற்றாத அந்த வலிகளோடு….