ஜனனம்

பன்னிர் குடக்குளியல்
உதிர ஒப்பனை

நாடகமேடைக்கு
நகர்த்தப்பட

அதிர்ச்சி கலந்த
பயத்தோடு

முதல் வசனம் அலறல்

உதிர ஒப்பனை

உடனடியாய்
கலைக்கப்பட

மறு ஒப்பனை ஆரம்பம்

பறவை சிறகின்
விடுபட்ட இறகாய்

இனி காற்றடிக்கும்
திசையில் எல்லாம்

பறக்க வேண்டும்
ஜனனம்

மரணம் வரை..,
நா.சே..,

எழுதியவர் : Sekar N (4-Apr-18, 8:58 am)
Tanglish : jananam
பார்வை : 264

மேலே