பட்டாம்பூச்சியாய் மனம்

சிறகடிக்கும் பட்டாம்
பூச்சியாய்

உன்னைக் கண்டு
மனம் பறக்க

ஏன் என்ற கேள்வி
எனக்குள்ளே

ஒரு காலத்தில்

விழித்திரையில்
விழுந்த

பிம்பங்கள் யாவும்

இரவு நேர

தொடர்வண்டி பயண
காட்சியாய் எதுவும்

மனத்திரையை
தொட்டதில்லை

இன்றோ நீ மட்டும்

பச்சைக்கம்பளம்
போர்த்திய

பனித்துளி தாங்கிய
புல்வெளியாய்

என் மனத்திரையில்

அட இது என்ன
விந்தை

இப்படியும் வார்த்தைகள்
வெளிப்படுமா?

என என்னையே
நான் கேட்க

விடையாய் நீ
அங்கே

ரசிகனாய் கவிஞனாய்
இன்னும்

எப்படி எல்லாம்
உருமாற்ற

நினைத்திருக்கின்றாய்
என்னை?
நா.சே..,

எழுதியவர் : Sekar N (5-Apr-18, 8:02 am)
பார்வை : 89

மேலே