கல்வியின் சிறப்பு---வஞ்சித்தாழிசை

வஞ்சித்தாழிசை :
செந்தமிழின் சந்தமதும்
வந்துவிழும் சிந்தையிலே
பந்தலிடும் சொந்தமெனும்
நந்தவனம் கல்வியன்றோ...
வெண்ணிலவின் தண்ணொளியாய்
எண்ணமதில் வண்ணமிடும்
மண்ணுலுகின் உண்மையான
வண்மையதும் கல்வியன்றோ...
நெஞ்சினிலே துஞ்சிவரும்
நஞ்சுதனை அஞ்சவிடும்
மஞ்சிடையே கொஞ்சிவரும்
செஞ்சுடரும் கல்வியன்றோ...