திருமகள் மதி

காற்றாய் கரைந்தது இருபது வருடம்.....
தாயின் மடியில் கொஞ்சம் ... தகப்பன் தோளில் கொஞ்சம்....
நீந்தி தவழ்ந்தது நினைவிலில்லை
ஓடிக்கழித்தது மறக்கவில்லை....
கட்டத்தின் காலமது
கட்டாயத்தின் கோல மது - மணக்கோலம்..
திருமகளுக்கு திருமதி வேடம்....
மணமேடையில் தலைகுனிந்தேன்
பெற்றோர் -
மனமகிழ்ச்சியில் தலைநிமிர
ஈன்றவர் முன்னாலே கண்ட கனவுகள்
கனவாய்க் கரைந்தது...
பிறந்த வீடு வழியனுப்ப...
புகுந்த வீடு வரவேற்க......
கனத்த நெஞ்சோடே
கட்டியவன் பின்னோடே
எட்டிவச்சு நடக்கையிலே
உடல் மட்டும் போகுதம்மா
உசிரு வர மறுக்குதம்மா
தாய் வடிக்கும் கண்ணீரு - பார்க்க
தொண்டை குழி அடைக்குதம்மா
தந்தை வடிக்கும் கண்ணீரு - பார்க்க
இதயம் துடி துடிக்குதம்மா
இன்பத்தை பகிர்ந்து துன்பத்தை மறைத்து
தனியாய் துடிக்கும் தகப்பன் நெஞ்சு -
எனக்காய் கதறுது முதல்முதலாய்....
மகன் பிறப்பான் என்றிருக்கையிலே
மகளாய் வந்து நான் பிறக்க....
எனை வெறுத்து ஒதுக்காமல்
கண்ணாய் காத்தவரே...
கவலை வேண்டாம்
கொண்டவனின் துணையோடு உம்மை
காலமெல்லாம் காத்துநிற்பேன்....
திருமதிகளின் திருவாளர்களே
மூன்று முடிச்சே நம்பிக்கை என
உமக்காய் ....
தன் சொந்தம் விட்டு
தன் பெற்றோர் விட்டு
தன் கனவை விட்டு
தன் வீட்டை விட்டு
வாழவருகிறாள்..... அவள்
உணர்வை மதித்து வாழப்பழகுங்கள்....
வாழ்க்கை வாழ்வதற்கே.....

எழுதியவர் : கோகுலம் (8-Apr-18, 12:39 am)
சேர்த்தது : gokulam
பார்வை : 137

மேலே