ஆசையை விற்று வாங்கியக் காசு

ஏழையாய் பிறப்பதே பிழை என்றால் அதிலும் நடுத்தர குடும்பத்தில் பிறந்தால் நரகம் என்பார்கள் பலர்.

இதுவும் ஒரு நடுத்தர குடும்பக் கதை தந்தையோ தினக் குலி தாயோ நாடறிய வீடே நாடேன இருப்பவள் இவர்களுக்கு ஒர் சொல்ல மகள்.

பெயருக்கு (பிரியா) ஏற்றார் போல பிரியமானவள்,அழகும் அறிவு நிறைந்தவள் வறுமையிலும் அவள் ஆசைக்கு இணங்க ஆங்கில வழிக் பள்ளியில் படிக்கலானள் வறுமையின் ருசி அறிந்த அவள் பத்தாம் வகுப்பில் மாநில முதலிடம் வந்தால்.

அதைத் தொடர்ந்து பன்னிரண்டாம் வகுப்பில் முதலிடம் வந்து தன் பள்ளி வருட வருடம் முதலிடம் வரும் மாணவர்க்கு மேலை நாடு மருத்துவ கல்லூரியில் சேரும் வாய்ப்பை அளித்து வருகிறது அதை வாங்குவதே அவள் எண்ணமும் கூட.

பன்னிரண்டாம் வகுப்பும் வந்தல் தன் விடாத முயற்சியால் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளிலும் நல்ல் மதிப்பெண் எடுத்து வந்தாள்.

அவளுக்கு இணைய படிப்புமும் அவளை விடச் செல்வத்திலும் உயர்ந்த மாலா என்பவளும் அதே பள்ளியில் பயின்று வந்தாள் அங்கும் போட்டி பொறாமை இருந்து வந்தது ஆனால் அவள் அதை வெளிக் காட்டது இருந்தாள்.

பொதுத் தேர்வும் நெருங்க நெருங்க அவர்கள் படிப்பின் வேகமும் அதிகரித்தது அது சமயம் பிரியவின் தந்தை வேலை முடிந்து விடு திரும்பினார் அதன் பின் மகளும் அவரும் சாப்பிட்டு அவர் உறங்கச் செல்ல இவள் படிக்கத் தொடங்கினாள்.

இரவும் கடக்கத் தொடங்கி நடு இரவை எட்டியது திடீரென்று அவள் தந்தை வலியால் துடிக்க செய்வது அறியாது அலைப்பேசி வழி மருத்துவமனைக்கு தகவல் சொல்ல வாகனம் வந்து அழைத்து சொல்ல சிகிச்சைகக்கு பின் மருத்துவர் அவளையும் தாயையும் அழைத்து அவருக்கு இருதய நோய் என்றுச் சொல்ல அடுத்து இது மூன்றாம் முறை என்றும் அறுவை சிகிச்சை தேவை என்று சொன்னார்

அவள் தந்தை தன்னிடம் இருந்த சேமிப்பை இப்போது மருத்துவ செலவுக்கு போது அறுவை சிகிச்சை பிறகு பார்ப்போம் என சொல்ல போன மருத்துவர் திரும்ப வந்து ஒரு மாத மருத்துவ மனையில் தங்கி பின்பு அறுவை சிகிச்சை செய்ய சொல்ல அவர்கள் தயக்கம் கொள்ள ஆரம்பித்தனர்.

அதைத் தொடர்ந்து மருத்துவர் சொல்ல அவள் தந்தை நீ கவலைக் கொள்ளாது தேர்வுக்கு தாயார் ஆகச் சொன்னார்.

அவளும் தேர்வுக்கு தாயாராகி தேர்வையும் முடித்தால் அதற்குள் சிகிச்சைத் தொடர்ந்த வண்ணம் இருக்க மாதம் ஓட அறுவை சிகிச்சைக்கு நேரமும் தேர்வு முடிவும் வந்தது அவள் தான் முதலிடம் ஆனால் இங்கு பணம் தீர்ந்து சிகிச்சை தொடர முடியா நிலை பிரியாவும் தன் தேர்வின் முடிவின் மகிழ்ச்சியை விடுத்து உதவிக் கேட்டு பலரை நாடினாள். தன் நண்பர்களிடமும் வந்து உதவிக் கேட்டாள் மாலவிடமும் போய் கேட்க.

இது தான் தக்க சமயம் என்று அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டாள் பிரியா உன் மருத்துவ வாய்ப்பை எனக்கு நீ அளித்தால் உனக்கு நான் உதவி செய்கிறேன் என்றாள் காரணம் மாலா இரண்டாம் இடம் வந்து இருந்தால் பிரியா வாய்ப்பை தவிர்த்தால் தானாக மாலாவிடம் வரும் எனும் நோக்கில் அவள் இதைக் கோட்டால்.

தன் தந்தையின் நிலை புரிந்து அவள் ஒப்புக் கொள்ள வாய்ப்பு மாலாவிடம் வந்தது பிரியவின் தந்தையின் சிகிச்சையும் முடிந்தது

இப்படி தான் பலர் தன் வாய்ப்பை விற்று இவ்வுலகில் வாழ்கிறார்கள்

எழுதியவர் : விஷ்ணு (8-Apr-18, 12:51 pm)
சேர்த்தது : தாரா கவிவர்தன்
பார்வை : 145

மேலே