அவளுடன் நானும்

முதுகில் முகம் புதைந்து

வளையல் தடம்

என் தேகம் பதிக்க

கண் சொக்க என்னை

கட்டியணைத்து அவள் ..


எதிர் வரும் காற்றும்

அவள் வாசம் வீச

காதல் வேகத்தில்

மோட்டார் சைக்கிளில்

அவளுடன் நானும் ....!!

எழுதியவர் : வினோ (11-Apr-18, 1:29 pm)
Tanglish : avalidan naanum
பார்வை : 158

மேலே