மச்சம்
உன் முகத்தில் அத்தனை
அழகையும் தந்த இறைவன்
கன்னத்தில் ஓர் மச்சமும்
வைத்தானே ஏன் என்று
தெரியுமா உனக்கு?
அது உன் அழகிற்கு
அவன் இட்டுவிட்ட
' திருஷ்டி பொட்டு'
இந்த முகத்தில்
பெண்ணே நீ
மச்சம்வைத்த முழு
நிலவாய் காட்சி தருகிறாய்