வைரமுத்து

"வார்த்தைகளின் தொகுப்பு கவிதையென்று"
கேட்டறினிந்தேன்-- அதற்கு முன்
எனது வாழ்வின் வெறுப்புகளை
வரியாக தொகுத்தேன்!
காண்போரெல்லாம் கவிதையென்றனர்
என்னையும்
கவிஞன் என்றனர்!!

புகழ்ச்சியொரு போதை
அதலும்
மனிதன் அல்லவா?... அதனால்
புகழ்ச்சிக்கு சற்று செவிசாய்த்தேன்!!

ஒருநாள் பயணத்தில்
ஒரு நபரின் கைபட்ட
புத்தகம் ஒன்றினை
புதிதாக வாசித்தேன்

புத்தகத்தில் இருந்தது
உங்கள் புகைப்படம் -- உங்களின்
படைப்புகள்!
முப்பது பக்கம் கூட
முழுமையாக படிக்கவில்லை!
அதற்கு முன்
முகத்தில் ஒரு வெறுப்பு
என்மேல்...

உந்தன் பாடல் வரிகளை
கேட்டேன் -- அதில்
பரவசம் அடைந்தேன்! ஆனால்
கவிதை அன்றுதான்
கண்களில் தென்பட்டது!!

உங்கள் வார்த்தை தொகுப்பினை
படிக்கும் முன்-- அதில்
உங்கள் வாழ்க்கை தொகுப்பினை
படித்தேன்....

கவிதைகாகஅர்பணித்த
உங்களை கண்டு வியந்தேன்--- அந்நேரமே
என்னை மேலும் வெறுத்தேன்!

அன்றுமுதல்
நிலைத்தெரியாத ஒரு தடுமாற்றம்
எந்நேரமும் என்னை தாக்குகின்றது...

காண்பதெல்லாம் கவிதை என்று
நினைத்து எழுதிவந்திருந்தேன்
உங்கள் படைப்புகளை
படித்த பிறகு
நான் எழுதியதெல்லாம்
கண்மூடித்தனம் என்று
நினைக்கத் தொடங்கிவிட்டேன்!!

நீங்கள் தொடர்ந்த "தமிழ் வரிகளை"
நான் தொடர்கிறேன்
என்று எண்ணும்போதெல்லாம்
ஏதோ ஒரு பாதிப்பு
என்னுள் ஏற்படுகின்றது!!

நீங்கள் எழுதிய வார்த்தைகளை
நான் எழுதுகிறேன் என்று
எதிர்நோக்கும் போது!
என் விரலிடையில் என்னை வெறுத்து
பேனா கீழே விழுகின்றது...

தவறேதும் செய்யாமலே
"தீயென்னும் சுடரினை திரட்டிவந்து"
என்னை எரித்துக்கொண்டிருக்கிறேன்...

எரியும் என் தேகம் அறியாமலும்
விளங்கும் விவரம் தெரியாமலும்
சந்தேகத்துடன் உங்களிடம்
ஒன்று கேட்கின்றது!
காயம் கண்ட
"என் வாழ்க்கை வெறுப்புகளும்"
கவிதைகளா?... என்று...
விடைச் சொல்வீர்களா?....
கவிதையின் விடியலே....
..............................................

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (12-Apr-18, 7:17 pm)
Tanglish : vairamutthu
பார்வை : 273

மேலே