ஒன்ன போலவே

ஒன்ன போலவே,
ஒலகில் ஒருத்தியும்
இருக்க மாட்டானு இதயம் இறுமாப்பு
கொள்ளுதே
ஐய்யோ!!!எகிறி குதிக்குதே!!!!

காரண மின்றியே
என் ஒதடு சிரிக்குது
ஏன்னு கேட்டக்கா, காரணி நீயா
இருக்குற
என்ன ஒனக்குள் நெய்யுற!!!!

தன் மழலை மடியில் மாய
தாயும் விருப்புவா
என் மங்கை மடியில் ஆய
நானும் விரும்பவா????

ஒன்ன போலவே,
ஒலகில் ஒருத்தியும்
இருக்க மாட்டானு இதயம் இறுமாப்பு
கொள்ளுதே
ஐய்யோ!!!எகிறி குதிக்குதே!!!!

மண்ண முட்டி வளரும் மொதபுல்லும்
மழவிட்ட பின்னே வரும் வானவிலும்,
உனக்குஒண்ணுனா உசுரகொடுக்கு
ஒரஞ்சபடியே என்உதிரமிருக்கு.

கண்ண தொட்டுவிட்டு விலகாதே
உள்ளபடி இரு அள்ள குறையாதே,
அன்புமாட்டும் மதியெக்கெடுக்கும்
மாலைவெயிலும் மனசஉருக்கும்.

காதல்!!!காத்துலையும் உண்டு உன்னால் உணருறேன்
பாத்து!!!பாத்துக்கோ என்ன
துரும்பா எளையுறேன்.

எனக்கு மட்டுமே புரியும் மொழிலே
வார்த்த வீசனும் வாசோம் பேசனும்
என்னுயிரே...!!!!

ஒன்ன போலவே,
ஒலகில் ஒருத்தியும்
இருக்க மாட்டானு இதயம் இறுமாப்பு
கொள்ளுதே
ஐய்யோ!!!எகிறி குதிக்குதே!!!!

-கிருஷ் அரிராஜ்

எழுதியவர் : கிருஷ் அரிராஜ் (12-Apr-18, 7:40 pm)
சேர்த்தது : கிருஷ் அரி
பார்வை : 89

மேலே