பெண்
பெண்களை தீண்டிய
கயவர்களை பெண்களாய்
மாற்றி இந்நன்னிலம்!
அதனில் விட்டிடுவோம்!
எம் கன்னியர் துயரம்
புரியட்டும் - சதை
உண்ணும் அம் மாக்களுக்கு!
மரணமென்பது தண்டனையல்ல
சடங்கிற்குச் சமமாகும்!
பூவை அவள் துன்பத்தை
நொடிகளில் அவனுக்குத்
தருவது தப்பாகும்!
காலம் மாறிபோனதனால்
கழுவில் ஏற்றிடுவோம்
நம் சட்டத்தை!
அடங்கப் பிறந்தவள்
நீயல்ல - புவி
ஆளப்பிறந்தவள்!!!
எனது கிறுக்கல்கள் ✍