பெண்களின் விடுதலை

அடுப்பு ஊதி ஊதி
சமைத்த காலங்கள் மாறினாலும்
பல துறைகளில் புதுமை பெண்கள்
பல வித சாதனைகள் புரிந்து
கொண்டு இருக்கும் இந்த
காலங்கள் வந்தாலும்

பெண்களை தாயாக, சகோதரியாக
பார்க்காத ஒரு சில ஆண்களால்

பெண்கள் தன் கனவுகளை இழந்து
தன் திறமைகளை இழந்து
தன் தன்னம்பிக்கையை இழந்து
பயந்து பயந்து வீட்டை விட்டு
வெளியே வராமல்

தன் வலிகளை வேதனைகளை
மனதில் சுமந்து சுமந்து

வீட்டிலேயே வாழும் பெண்கள்

எங்கே சென்றாலும் எங்கே பார்த்தாலும் கொடுமைகள்
சிந்தித்து பாருங்கள்

விடுதலை பெற்று விட்டோம்
எங்கே அந்த விடுதலை?

ஒரு பெண் எப்போதும் பயமின்றி
நடு சாமத்தில் பயணித்து
பாதுகாப்பாய் வீடு செல்கிறாலோ

அக்கணமே விடுதலை...

எழுதியவர் : உமா மணி படைப்பு (16-Apr-18, 9:38 am)
சேர்த்தது : உமா
Tanglish : pengalin viduthalai
பார்வை : 100

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே