சட்டம்
![](https://eluthu.com/images/loading.gif)
கண்களை
கட்டி
குருடாக்கியது
போதாதென்று
செவிடாக்கும்
முயற்சியோ
நீதியின்
கைய்யில்
மரசுத்தியல்?
புனையப்படும்
சாட்சிகள்
புணரும்
தூக்குகயிறு
சவக்குழியில்
சத்தியம்,
ஊதாசின
படுத்தப்படும்
உதவாக்கரை
உத்தரவு
தடுமாறும்
தீர்ப்பு,
இதற்கு
இவ்வளவு
என்று
வரைவில்
இல்லாத
சட்டம்
தடம்மாறும்
நீதி!
அத்திபூத்தார்
போல்
தண்டிக்கும்
ஒரு மாயை
யார் கண்டது
அதற்கும்
காரணம்
இருக்கும்
இந்திய
ஜனநாயக
சட்டம்!
நா.சே..,