சிதைந்து போகும் மொட்டுகள்
பால் மணம் மாறா
கன்னி மயில் அவள் ..
வரமொன்று வாங்கி வந்தாள்
கடவுளிடம்
பிறப்பு ஒன்று எடுத்தால்
கன்னி மயிலாக..
அவள் செய்த பாவம் என்னவோ
கன்னி மகளாக பிறப்பு எடுத்தது..
மலர்ந்து சிரிக்க வேண்டிய பூக்களை
மொட்டுகளிலே சிதைத்ததும் ஏனோ
துள்ளி திரிந்து ஆட வேண்டிய
மயிலின் பீலியை சிறகொடித்து
நசுக்கியதும் ஏனோ
அவள் பாலினம் மேல் கொண்ட
காம வெறியம்மா..
இன்னும் எத்தனை எத்தனை மொட்டுகளை
மலர விடாமல் சிதைக்குமோ
வெறி பிடித்த நரிகள் கூட்டம்
தாய் கருவறையில்
உயிர் பெற்ற மொட்டு ஒன்று
கோவில் கருவரையில் கருகி விட்டது ..
கற் சிலையும் கண் விழிக்குமே ..
மயில் அது வலி பொறுக்காமல்
கத்தியது ..
கல்லாய் போன கடவுளே !!!!
நெஞ்சு பொறுக்கலியே கன்னி மயில்
போராடிய மரண வலி
உன் செவிகள் இரண்டும்
செவிடாய் ஆனதோ
அவள் உன்னை
உதவிக்கு அழைக்கும்போது ..
அவள் உதிரம் காயும் முன்னே
அவன் உதிரம் ஓட வேண்டும்
இனியொரு மொட்டுகளை தீண்டுமுன்பே
அவன் உறுப்பு அறுந்து ..
அவளின் மரண வலி
நினைவுக்கு வர வேண்டும்
அவன் பாலினம் சிதைக்கும் பொழுது ..