உன் மீது பாசம்

நான்கு பிள்ளைகளை பெற்ற
மகராசி நீ...
கஷ்டப்பட்டு வளர்த்து
படிக்கவைத்து ஆளாக்கி
சமூகத்தின் உச்சாணியில்
ஏற்றி வைத்து விட்டு,
இன்று
ஆறுதல் நிழல் இன்றி
பரிதவிக்கும் நீ.,
பார்க்கும் பிள்ளைகளையெல்லாம்
உன் பிள்ளைகளாக
பார்க்கும் நீ,
ஏன் பாசமெனும்
வலையில் சிக்கி தவிக்கிறாய்?

உன் மனதை கல்லாக்கு....
அல்லது இரும்பாக்கு....
இளக விடாதே....

உன் மீது பாசம்,
நேசம் இன்றி திரியும்
மானுட ஜென்மங்களை
நோக்கி உன் புண்ணிய மனதை
ஏன் திரிய விடுகிறாய்....

செத்து சுண்ணாம்பாகி போன
உறவுகளில் ஏன்
வைரக் கல்லை தேடுகிறாய்?....
..
அதை விட நன்றியோடு இருக்கும்
ஐந்தறிவு ஜீவன்களோடு
மனதை பகிர்ந்து கொள்...
சிந்தை குளிரும்
மனம் சமாதானமாகும்....

எழுதியவர் : சாந்தி ராஜி (20-Apr-18, 5:12 pm)
Tanglish : un meethu paasam
பார்வை : 711

மேலே