பயம்

உருவில்லா பேய் , கிருமி இல்லா நோய் ,
பொய்களின் புதுவரவு,
மணம் பிரசவிக்கும் குழந்தைகள் ,
கற்பனை கொடுத்த
உருவம் ,
சந்தேகத்தின் சாட்சி ,
ஆனந்த ஒளியை கவ்வும் இருட்டு ,
மரணத்தின் வாழ்வு,
மழிச்சியின் மரணம்.
உறக்கம் கெடுக்கும்,
உறவை வெறுக்கும்,
உண்மையை மறைக்கும் ,
பாதுகாப்பு தேடும்,
பிரார்த்தனை பெருக்கும் ,
ஐம்புலன்களை அலைக்கழிக்கும்,
எதிர்காலத்தை இரையாக்கும் .

எழுதியவர் : (20-Apr-18, 4:40 pm)
சேர்த்தது : சகி
Tanglish : bayam
பார்வை : 80

மேலே