மழை நீர் போல

மழை நீர் போல" ஒரு
வர ப்பிர சாதமேது
பனி நீராயினும்
சுணை நீராயினும்
பாரெங்கிலும் ஓடிப்
பாய்ந்திடுமோ||
பாய் ந்திடி னுமது
உழவர்கள் ஓடிடும்
ஓட்டத்திற் கீடுகொடா
காடுகளை ஈரமாக்கும்
நாடுகளை ஒரங்கட்டும்
மழை நீர் போல" ஒரு
வர ப்பிர சாதமேது ||
பருவ மழைத்தன் புரு
வத்தை யுயர்த்தித்தன்
கர்வத்தை காட்டமண்
பாலம்பாலமாய் வெடிக்க||
வெடிப்பின் வாயில் வாடியே
பயிர்கள் யாவும் துடிதுடிக்க
உயிர் நீத் தகால மரணம்||
பயிர்கள் மட்டுமாப் பயிர்
இடுவோரையும் மரணிக்க
பாரெங்கும் ஓலங்கள் ||
காலமோ சூது செய்து
பன்னீர் தெளிப்பது போல்
ஆலயங்களில் தீர்த்தம்
தெளித்து போவதுபோல்
மழை குறைந்துபோக
நிலத்தடியில் நீரைத்
தேடித்தேடி ஓய்கிறோம்
மழை நீர் போல" ஒரு
வர ப்பிர சாதமேது ||
பொழிந்தால் நாட்டையே
புறட்டிப்போடும திலும்
நண் மையுண் டடியோடு
கழுவி துடைத்து க்காய
வைத் துவிட் டமறும்
நோய் நொடிக் கிடமிரா ||
காய்ந்தால் காய்ந்தபடி
கால் நடைகள் காய்ந்த
மண்ணை மேய்ந்தபடி
உயிர்நீத்து சாய்ந்தபடி
கசாப்பிற் காகும்படி
மழை நீர் போல" ஒரு
வர ப்பிர சாதமேது ||
சேமிக்க இயலாமையே
சேவகர்கள் பாராமுகம்
பூமிக்கு வந்த அவகேடு||
நாளைக்கு வரப்போகிற
பலாக்காயை காட்டிலும்
இன்றைக்கு கிடைக்கும்
கலாக்காயே மேலென்கிற
மெத்தனமே தத்தளிக்கும்
இத்தனைக்கும் காரணம்||
•••••••
ஆபிரகாம் வேளாங்கண்ணி எழுதிய
"மழைநீர் போலே"
கவிதைமணியில்