இரவும் பகலும்

இரவு வரும் பகலும் வரும் ஒரே நேரத்திலே!
😊😊😊😊😊
என்னங்க பாட்டிம்மா பாட்டெல்லாம் பாடறீங்க?
😊😊😊😊😊
எங் குரல் வளத்தையும் என் அழகையும் பாத்துத்தான்டி உங்க தாத்தா என்னைய திருமணம் செஞ்சிட்டாரு.
😊😊😊😊😊
இந்த வயசிலயும் நீங்க அழகாத்தான் இருக்கறீங்க பாட்டிம்மா. தாத்தா போயி பத்து வருசம் ஆச்சு. ஊரில இருக்கற தாத்தாமாருங்கெல்லாம் உங்கள நோட்டமிட நம்ம வீட்டுப் பக்கம் அடிக்கடி வர்றாங்க பாட்டிம்மா.
😊😊😊😊😊
அந்தக் கெழப் பயலுக எளவட்டமா
இருக்கறபோதே என்ன சுத்தி வட்டமடிச்சவங்கதான்டி.
😊😊😊
அந்தக் கதைய பல தடவை சொல்லீட்டீங்க. உங்க இரவும் பகலும் பாட்டப்பத்தி கொஞ்சம் சொல்லுங்க பாட்டிம்மா.
😊😊😊😊
அக்கா தங்கச்சி உங்க ரண்டு பேரோட பேருங்களப்பத்தித்தான்டி நான் பாட்டுப் பாடினேன்.
😊😊😊😊😊
எங்க ரண்டு பேரோட பேருங்களுக்கும் இரவுக்கும் பகலுக்கும் என்ன தொடர்பு.
😊😊😊😊
அடியே அக்கா, உம் பேர நீ சொல்லுடி.
😊😊😊😊😊
நீங்கதான் எம் பேர உச்சரான்னு கூப்புடுவீங்களே. எம்பேரு உஸ்ரா.
😊😊😊😊😊
அடியே தங்கச்சி, உம் பேரு என்னடி.
😊😊😊😊😊
பாவம் எம் பேரு உங்களுக்குத் தெரியாது. என்ன நிச்சா, நிச்சான்னு கூப்புட்டு அசிங்கப்படுத்துவீங்களே, எம் பேரு நிஷா.
😊😊😊😊😊
சரி .உங்கப் பேருங்களுக்கு அர்த்தம் தெரியுமா?
😊😊😊😊😊
நாங்க என்னத்தக் கண்டோம். எங்க அம்மா அப்பா, அதாவது உங்க மகன் மருமகளுக்கே எங்க பேருங்களுக்கான அர்த்தம் தெரியாதுங்க பாட்டிம்மா. எல்லாரும் அவுங்க பிள்ளைங்களுக்கு இந்திப் பேருங்கள வைக்கிற மாதிரி உங்க மகனும் மகளும் செஞ்சிட்டாங்க.
சரி, அந்த இரவும் பகலும்....?
😊😊😊😊😊
நம்ம பக்கத்துத் தெருவில இருக்கற இந்தி ஆசிரியர் நம்ம வீட்டுக்கு வந்தாரு. அவர்தான் உங்க பேருங்களுக்கான அர்த்தத்தைச் சொன்னாரு. அக்காக்காரி பேருக்கு அர்த்தம் பகல். தங்கச்சிக்காரி இரவு.
😊😊😊
அய்யோ கடவுளே நான் பகலா?
😊😊😊😊
அய்யய்யோ கடவுளே நான் இரவா?
எங்க அம்மா அப்பா வீட்டுக்கு வரட்டும். அவங்கள என்ன பாடுபடுத்தறோம்னு பாருங்க பாட்டிம்மா. எங்க பேருங்களுக்கான அர்த்தம் தெரிஞ்சா எங்கள எல்லாரும் 'இரவு, பகல்'ன்னு கூப்புட்டு கிண்டல் பண்ணுவாங்களே. நாளைக்கே எங்க ரண்டு பேருக்கும் தமிழ்ப் பேருங்கள வச்சு பள்ளிக்கூட பதிவேட்டிலயும் மாத்தற வரைக்கும் நாங்க வேலை நிறுத்தம் செய்யப் போறோம் பாட்டிம்மா.
😊😊😊😊
நம்ம காஞ்ச பட்டிக்காட்டு லட்சணமே இப்பிடி. பட்டணத்தைப்பத்தி சொல்லறதுக்கு எதுமில்லை. பட்டணத்துக்குப் போயி ஒரு சோசியகாரங்கிட்ட ஐநூறு ரூபாய் கட்டித்தான்டி உங்க பேருங்கள வாங்கிட்டு வந்தாங்க. திரை ரசனை உள்ளங்களுக்கு எப்பிடீடி தாய்மொழிப் பேருமேல பற்று வரும்?
■■■■■■■◆■◆■■■●●◆■■■■■■■■■■■■■■■■■■■■
சிரிக்க அல்ல. சிந்திக்க.
■■■◆◆◆◆◆◆◆◆★★★★ ■■◆★★★■■◆◆◆◆

எழுதியவர் : மலர் (22-Apr-18, 10:21 pm)
Tanglish : iravum pakalum
பார்வை : 294

மேலே