வெப்பச்சலனம்
ஒவ்வொரு மனசும் இதமாய்த்
தன்னை உணரும் நாள்..
ஓய்வு நாள்... இது
உனது நாள்...
ஓய்வில் பெறும் சக்தி...
நாளெல்லாம் நமதாக்கும்..
பூமி தன்னைத்தானே சுற்றி
சூரியனையும் சுற்றும்...
மனசு தன்னைத்தானே நேசித்து
உலகையும் நேசிக்கும்...
நொடிகள் ஒவ்வொன்றும்
அர்த்த ஸ்வரம் இசைக்கும்...
மனசின் வெப்பச்சலனம் கூட
சந்தோச மழை தருவிக்கும்...
ஞாயிறு காலை வணக்கம்...
😀👍🙋🏻♂🙏🌹