கற்பழிக்கும் காமக் குடியரசு

கற்பழிக்கும் காமக் குடியரசு

இது கற்பழிக்கும் காமக் குடியரசு
இங்கு பெண்கள் எல்லாம் சதைகள்
கன்னியர்கள் எல்லாம் போகப்பொருள்கள்
காமக் கருவிகள்.

மாதரை போற்றியதாக
பிதற்றும் மகா சமுதாயம்.
முப்பத்தி முக்கோடி தேவர்களும்
நாற்பத்தி எட்டாயிரம் ரிஷிகளும்
கொண்ட நாடாம்.
பெண்கள் எல்லாம் தெய்வங்களாம்.
தேவி மாதக்களாம்!
ஆனால் கற்பழிக்கப்படுவார்களாம்.
பெண் என்றால்
பேயும் இறங்கி வருமாமே!
இரக்கமில்லா பேய்கள்
எட்டு வயதுக் குழந்தையை
எப்படியடா கைவைப்பாய் .
வெளியில் சொன்னால்
வெட்ககேடு
வெளி உலகம் காரித்துப்பும்
நாடு தலைகுனியும் வெட்கம்.
இது கலாச்சாரம் வளர்ந்த நாடு .
இது கலாச்சாரம் வளர்க்கும் நாடு.
இது சம உரிமையிள்ள
ஜனநாயக குடியரசு,
கற்பழிப்பு குடியரசு.
பெண்கள் செய்கின்றார்
பொன்னான பெரிய சாதனைகள்
வென்றிட்டார் தங்க வெள்ளி பதக்கங்கள்
காமன்வெல்த் போட்டியிலே.
காத்திட்டார் குழந்தைகளை
கல்வி தந்திட்டார்.
போற்றிட வேண்டுமடா
பெண்ணினம்.
உடைத்திட வேண்டுமடா
ஆண் வெறி காமத்தனம்
வாழ்வது என்ன காமக் கற்பழிப்பு குடியரசா ?

எழுதியவர் : இராமானுஜம் மேகநாதன் (30-Apr-18, 3:54 am)
பார்வை : 204

மேலே