எனக்குள் வாழ்வது நானா? இல்லை நீயா?

என் விருப்பங்கள் நிறைவேறாவிடினும் பரவாயில்லை
உன் விருப்பங்களை
நிறைவேற்ற வேண்டும் என துடித்தேன்....
நான் அழுதாலும் பரவாயில்லை
உன்னை அழ விடாமல்
பார்த்து கொண்டேன்....
என் கனவுகள் கலைந்தாலும்
பரவாயில்லை
உன் கனவுகளை
நிஜமாக்க உழைத்தேன்
எனக்கு வலித்தாலும்
பரவாயில்லை
உனக்கு வலிக்காமல் இருக்க
என் காயங்களை எல்லாம்
உன்னிடம் இருந்து மறைத்தேன்
அடி அழகே எனக்கு ஒரு சந்தேகம், எனக்குள் இருப்பது நானா? இல்லை நீயா?......

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (30-Apr-18, 3:49 pm)
பார்வை : 59

மேலே