நிலவும், அவளும்

அதோ அங்கு பளிங்குபோல்
நிற்கிறாள் நிலவொத்த அழகு
என்னவள் அவள் என்வரவிற்கு
காத்து நிற்க , இதற்கிடையில்
வானில் வந்த வெண்ணிலவு -அவளை
தன் காதலியோ என்றெண்ணி
மண்ணை நோக்கி வர நினைத்ததுவோ-
அப்போது நான் என்னவளை நெருங்க
ஓ, இவன் அவள் காதலன்தான் என்று தெளிய
நாணி ஓடிப்போய் மேகத்தின் பின்னே
மறைந்துபோனது எங்களைக்காண
முகமில்லாத, அந்த வான்நிலவு.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (1-May-18, 5:44 am)
பார்வை : 136

மேலே