ஒரு
ஒரு அலைமனம்
நிலை தடுமாறி
தடம் மாறுதடா
உன் பார்வையில்...
ஒரு வாழ்க்கை இங்கே தனிமையில்
வாழ்கிறதடா உன் நினைவில்...
ஒரு சூரியன்
தேய்கிறதடா
உன் முகம் காணா
ஏக்கத்தில்
ஒரு கடிகாரம் காலம்
மறந்து போகுதடா
உன் மீதான காதலில்...
இதயம் எனும்
ஒரு தையல் எந்திரம்
தைக்க மறுக்குதடா
உனை தவிர்த்து வேறாள் பிம்பத்தை...
தொலைத்த பொருளை தொலைத்த இடத்திலேயே தேடுவது போல்
ஒரு பறவை சிறகை தேடுதடா உன்னிடத்தில்...
இந்த எல்லா ஒருக்களுமே
ஒட்டுமொத்தமாய் நானே...
என் ஒட்டு மொத்தமும் இனி நீயே...
இனியென்றும் நம்முடி முதல் அடி வரை நம் காதலே....ஒரு பார்வை எதிர்பார்த்திருக்கிறது உன்னைப் பார்க்கவே....
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
