உழைப்பாளி

உழைத்தவன் களைத்துப் போகலாம்,
உழைப்பிற்கு என்றும் களைப்பில்லை,
உழைத்த கூலி கிடைக்காது
களைத்துப் போய்,
உடல் தளைத்துப் போய்
வறுமை பழகி அதில்
திளைத்துப் போய்,
முதலாளி பல இடம் கிளைத்துப்போக
உழைத்து போட்ட ஏமாளி
தொழிலாளிகளை ஏமாற்ற
முதலாளித்துவத்திற்கு கிடைத்த
ஓர் அருமையான தின மே மே தினம்

எழுதியவர் : பாலமுருகன் பாபு (1-May-18, 4:46 pm)
சேர்த்தது : BABUSHOBHA
Tanglish : uzhaippaali
பார்வை : 88

மேலே