காதல் கனவு!!!
உன் இருவிழிப் பார்வை
என் இருதயம் பிளக்குதடா!
காதல் என்னும்
கரையற்ற நதியில்
என்னுயிர் கலக்குதடா!
நான் நித்திரையில் தூங்கினாலும் நெஞ்சில்
உன் நினைவே நிலைக்குதடா!
நீயும் நானும் ஒன்றாய் போகும் நடைபாதை கனவுகளில் என்
இரவுகள் மூழ்கி திளைக்குதடா!
காலத்தின் இடைவெளிகள் நம் காதலை அளக்குதடா!
அன்பே!
நாம் கண்டகாதல்
கனவெல்லாம் நிச்சயம்
ஒருநாள் பலிக்குமடா!.....