ஸ்ரீ மகாசுவாமிகளின் கனவு நனவானது

மகாசுவாமிகளுடன் மிகநெருக்கமாகத் தொடர்பு கொண்டவர்களின் வாயிலாக இக்கோயில் அவர் தெய்வீக ஆற்றலால் கண்டகாட்சியின் பிரதிபலிப்பே என்பதனைத் தெள்ளத் தெளிவாக அறிய முடிகிறது. மகாசுவாமிகளின் கனவை நனவாக்கியது திருக்கோயில். இத் இவ்வாலயத் துவக்கப்பணி முதல் இறுதிவரை மிகுந்த கவனத்துடனும் ஆழ்ந்த ஈடுபாட்டுடனும் திட்ட வரைபடத்தின் நுணுக்கங்களைத் தெள்ளத் தெளிவாக விளக்கினார். அவரது வழிக்காட்டுதலைப் பின்பற்றி அவர் விருப்பப்படிக் கோயிலை நிர்மாணித்து அவரது கனவை மனநிறைவுடன் நனவாக்கினர். எனவே இது மகாசுவாமிகளின் உத்தர சிதம்பரம் நடராஜர் திருக்கோயில் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

1894ஆம் அண்டு மே மாதம் 20ஆம் நாள் மகாசுவாமிகள் இப்பூலகில் அவதரித்தார். சுவாமிநாதன் என நாமகரணம் சூட்டப்பட்ட மகாசுவாமிகள் தனது குழந்தைப் பருவம் முதலே நடராஜப் பெருமானிடம் ஆழ்ந்த பக்தி கொண்டிருந்தார். அவர் தந்தையார் அவர்கள் சிதம்பரம் ஆலயப் பணியை ஏற்றது முதல் நடராஜப் பெருமானை அருகாமையில் வணங்கும் வாய்ப்பினைப் பெற்றார். இளம்பிராயம் தொட்டே நடராஜப் பெருமானிடம் கொண்டிருந்த ஆழ்ந்த பக்தியும் அன்பும் நிலைபெற்று வளரத் தொடங்கியது. இளைஞரான சுவாமிநாதன் 1907ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13ஆம் நாள் காஞ்சி காமகோடி பீடத்தின் மடாதிபதியாகப் பொறுப்பேற்றார். அன்று முதல் ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் என அழைக்கப்பட்டுப் பொறுப்பேற்றார். இளம் பிராயத்திலிருந்தே அவர் நடராஜ பெருமானிடம் கொண்டிருந்த ஆழ்ந்த பக்தியும் அன்புப்பிணைப்பும் நிலைப்பெற்று வளரத்தொடங்கியது இளைஞனான சுவாமிநாதன் 1907ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13ஆம் நாள் காஞ்சி காமகோடி பீடத்தின் பீடாதிபதியாகப் பொறுப்பேற்றார்.

சிதம்பர நடராஜ பெருமானிடம் கொண்டிருந்த ஆழ்ந்த பக்தியினால் 1933ஆம் ஆண்டு தனது முதல் பாத யாத்திரையாக அவ்விடம் சென்றார். அவர் சென்ற பல பாத யாத்திரைகளில் இந்த முதல் பாத யாத்திரை சரித்திரப் புகழ் வாய்ந்தது ஆகும். சிதம்பரம் ஆலயத்தின் தலைமை மதகுரு ஸ்ரீ தண்டபாணி தீக்ஷதர் அவர்களுடன் மூடிய அறையினுள் 4 மணி நேரம் அளவளாவி உரையாடி விட்டு வந்த மஹாஸ்வாமிகளிடமிருந்து மயிக்கூச் செறியும் வண்ணம் தகதகவென ஒளிப்பிரகாசம் வீசியது என்பதற்கு அவருடன் நெருக்கமாகத் தொடர்ந்து சென்றவர்களே சாட்சி.
இச்சூழ்நிலையில் ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகளுக்கு மற்றுமொரு நடராஜர் கோயிலை வேறு ஏதாவது ஒரு இடத்தில் சிதம்பரம் கோவிலைப் போன்றே உருவாக்க வேண்டும் என்ற தெய்வீக அகத்தூண்டுதல் (உத்வேகம்) ஏற்படத் தொடங்கக் காரணமாய் அமைந்தது என்பதனை 1933ஆம் ஆண்டு திரும்பி வந்த போது அவருடன் நெருக்கமாக இணைந்து வந்தவர்கள் உறுதியான நம்பிக்கையுடன் கூறினார்.

அதன் பின்னர் பாதயாத்திரை சென்ற இடமெல்லாம் மவாமிகள் நடராஜர் கோயில் கட்டுவதற்குப் பொருத்தமான இடத்தைத் தேர்வு செய்ய ஒருவேளை முக்கியத்துவம் கொடுத்தாரா ஏற்கனவே சதாரா அவரது தெய்வீகக் காட்சி உருவாக அமைந்து 50 ஆண்டுக்குப் பின் சென்ற கடைசி பாதயாத்திரையின் போது தேர்வு செய்தாரா எனும் இரகசியத்தை அவர் ஒருவரே தீர்வு செய்ய முடியும்.1978ஆம் ஆண்டு சமயப் பிரசாரம் செய்வதற்காகத் தனது கடைசி பாதயாத்திரையை முடிவு செய்த அவரது குறிக்கோள் சதாரா செல்வதே ஆகும்.

காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் 1979ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் புனிதபூமியான உகாருக்கு வருகை தந்தார். உகாரைச் சேர்ந்த பரம பூஜ்ய ஸ்ரீ நாராயணந்த சரஸ்வதி இருவரும் சுவாமிஜியை வரவேற்று உபசரித்தனர். காஞ்சி திரும்பிய சுவாமிஜி மறுவருடம் (1980) சங்கிலி காரட் வழியாகப் பயணம் செய்து புனித ஆறுகளான கிருஷ்ணா நதியும் வெண்ணாறும் சங்கமிக்கும் இடத்தில் உள்ள சதாராவை அடைந்தார். அந்த ஊரைச் சேர்ந்த சாது சமர்த்த இராமதாசர் சஜ்ஜின்கார் குன்றுக்கு வருகை புரிந்ததே சதாரா தேசிய அளவில் புகழ்பெற்ற புனிதத் தலமாகத் திகழ்வதற்குக் காரணம் ஆகும். தன் 88ஆம் வயதில் சதாராவிற்கு வ்ந்திருந்த சுவாமிஜி அவர்கள் தனது தள்ளாத வயதிலும் மிகுதியான காய்ச்சலையும் கடும் மழையையும் பொருட்படுத்தாது அஜிங்கதாரா கூட்டுறவு சர்க்கரை ஆலையிலிருந்து தொடங்கும் சேந்த்ரே வழியாக சஜ்ஜின்காட் குன்றில் தனது காலடியைப் பதித்தார். சோர்வின்றி 800 படிக்கட்டுகளைக் கடந்து அங்கலாதேவி ஆலயத்தை வந்தடைந்த காஞ்சி காமகோடி பீடத்தின் பீடாதிபதியான மகாசுவாமிகள் சமர்த்த இராமதாசன் சமாதி இருந்த திக்கை நோக்கி பக்தியும் மரியாதையும் கலந்த மனமார்ந்த வழிபாட்டினை செய்தார். பின்னர் மனநிறைவு அவ்விடம் அமர்ந்த சுவாமிகள் தன்னைத் தொடர்ந்து வந்த சிஷ்யர்களை சமர்த்தராமதாசர் சமாதிக்குச் சென்று வணங்கி வருமாறு பணிந்தார். சுற்றுபுறச் சூழல் காரணமாக வருகை புரிந்தோர் தங்களுக்குக் கிடைக்க வேண்டிய தெய்வீக உணர்வினை தவறவிடக்கூடாது என எண்ணினார். அவாவுடன் மென்மையான உணர்வுடன் சாதுக்களின் வாய்மொழிச் சொற்களின் பொருளைத் தேட முற்படுவோர் இறையுணர்வை உணர்வது மட்டுமின்றி இறைவனையும் காண்பர் எனப் பலர் தனது அனுபவ வாயிலாக அறுதியிட்டுக் கூறுகின்றனர்.

சஜ்ஜன் காட்டிலிருந்து இறங்கி வந்த சுவாமிஜி பரளியில் ஓரிரவு தங்கினார். அதன் பிறகு அவர் வேத பாரம்பரியம் மிகுந்த புகழ்பெற்ற சங்கரமடத்தை நோக்கிப் பயணம் செய்தார். சதாராவில் வேதம் கற்றுத் தேர்ச்சி பெற்ற ஞானி பண்டிதர், காசி நாத சாஸ்திரி அவர்களை சந்திக்க ஆவலுடன் இருந்தார். வெகு நாட்களுக்கு முன் பண்டிதர் சுவாமிஜியுடன் தங்கி இருக்கும் அரிய பாக்கியத்தினைப் பெற்றார். மடத்திற்குச் செல்லும் வழியில் சதாராவில் அரச வம்சத்தினர் வசிக்கும் இடமான அடலத்வாடாவில் ஒரு வீட்டின் முன் திடீரென நின்றார். தனது உதவியாளர்களிடம் மாவீரர் சிவாஜியின் சிலையை அவ்வீட்டினரிடமிருந்து பெற்று வருமாறு பணித்தார். மகாசுவாமிஜியின் வருகையைக் கேள்வியுற்ற, எளிமையான தோற்றமும் களையான முகமும் கொண்ட பெண்மணி ஸ்ரீமதி சுமித்ரா ராஜி போன்ஸ்லே பக்தியுடன் சுவாமிஜியைத் தரிசனம் செய்ய உடனடியாக வீட்டின் வாயிலுக்கு வந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் சுவாமிஜியைத் தரிசனம் செய்ததும் தீபாவளித் திருவிழாவின் போது மகாசுவாமி வருகை தந்ததும் அக்குடும்பத்தினருக்கு எல்லையற்ற மகிழ்ச்சியை அளித்தது. சுவாமிஜி அத்தருணத்தில் சிவாஜியின் உருவச்சிலையை கண்ணைக் கவரும் பொன்னாடையினால் நன்றியுணர்வுடன் அலங்கரித்தார். அதனை அவர்களிடம் கொடுத்து வணங்கி வரச்சொன்னார்.

சிவாஜி மகாராஜ் இல்லாமலிருந்தால் நமது இந்து மைய கலாச்சாரம், தெய்வங்களின் புனிதத்தன்மை மற்றும் எண்ணற்ற புத்தகங்களின் சேகரிப்பு ஆகிய அனைத்தும் அழிந்திருக்கக்கூடும். சிவாஜி மகாராஜ் தான் இந்துக்களின் சுதந்திர ஆதிக்கத்தை நிலைநாட்டினார் என்பதனையும் கோலாகலமான திருவிழாவின் முடிவில் ஈடு இணையற்ற மன்னரின் தியாகச் செயல்பாடுகளையும் குறித்து விளக்கம் அளித்த பின்னர் தனது நன்றியுணர்ச்சியை அவருக்கு அர்ப்பணித்தார். அதன் பிறகு சுவாமிஜி மடத்தை நோக்கி தனது பாதை யாத்திரையும் ஆரம்பித்தார்.

நீண்டகாலம் அங்கு தங்கியபொழுது (11 மாதங்கள் - ஜுன் 1980 முதல் ஏப்ரல் 1981 வரை) அவரது குறிக்கோளின் உச்சமாக 1980ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி பூமி பூஜையைத் தொடங்கி வைத்து, அதனையடுத்து ஆறு மாத கால அவகாசத்தில் தனது ஆழ்மனதில் தளர்ந்து கிடந்த முனைகளை எல்லாம் ஒருங்கிணைத்து நடராஜர் ஆலயத்தின் வரை படத்தைச் செம்மையாகத் தீட்டிக்கொடுத்த பின்னர் பண்டரிபுரம் சென்று விட்டலனைத் தரிசனம் செய்து விட்டுக் காஞ்சிபுரத்திற்குத் திரும்பினார்.

நம் மனதில் ஒரு நச்சரிக்கும் கேள்வி எழுகிறது. ஏன் மகாசுவாமிகள் சதாராவைத் தேர்வு செய்தார்? வேதங்களில் சிற்ப சாஸ்திரங்கள் கூறுவது போல் தென்னிந்திய கடைசியாக உத்தர புள்ளி இடம் பெற்று உள்ளதாலா? அல்லது கிருஷ்ண வெண்ணா தனது கிழக்கு நோக்கிய திருப்பத்திற்கு முன் புனித நதிகளான கிருஷ்ணா மற்றும் வெண்ணா நதிகள் சங்கமிக்கும் இடம் சதாரா என்பதாலா? மீண்டும், ஞானம் மிகுந்த மகாசுவாமிகள்தான் இந்த இரகஸ்யத்தைத் தீர்க்க முடியும்!

மீண்டும் காஞ்சிபுரம் திரும்பிய மகாசுவாமிகளின் மனதை விட்டு சதாரா கோயில் குறித்த பார்வை அகலவில்லை. விரிவாகத் தெளிவுபட விளக்கி விட்டு வந்த அவரிடம் சதாராவில் நடந்து கொண்டிருக்கும் செயல்பாடுகளை உடனுக்குடன் தெரிவித்தனர். கோயில் நிர்மாணப் பணிக்குத் தேவையானப் பொருட்களைச் சேகரிப்பதில் தனது கவனத்தை ஒருமுகப்படுத்தினார். இவரது தொடர்ந்த ஈடுபாடு மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் கேரள அரசுகளைக் கோயில் நிர்மாணப் பணியில் பங்கு கொண்டு பொருளியல் சிக்கல்நிலைக்குத் தீர்வுகாணச் செய்தது.

‘‘சிதம்பர இரகசியம்’’ குறித்து அறிந்துவர கணபதிஸ்தபதியை மகாசுவாமிகள் அனுப்பினார். நிபுணர் குழுவினர் கூற இயலாது எனக் கூறியதோடு மகாசுவாமிகளைச் நேரில் சந்தித்து இரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டும் என முழு நம்பிக்கை வாக்குமூலம் எடுத்துக் கொண்டுள்ளதால் தங்களால் வெளியில் சொல்ல இயலவில்லை எனக் கூறி அவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டனர். மகாசுவாமிகள் தானே முயற்சி செய்து தீர்வு கண்டார்.

மேலும் அவர் கூறியபடி கோயில் தூண்களில் செதுக்கப்பட்ட 108 கரணங்களும் தனிப்பட்ட தரக்குறியீடாக (haiimark) விளங்குகின்றன. இக்கரணங்கள் மகாசுவாமிகளின் பூர்ண அனுக்ரஹத்தினால் திருமதி பத்மா சுப்பிரமணியம் அவர்கள் மேற்பார்வையில் செதுக்கப்பட்டன.

கோயில் அவரது தெய்வீகப்பார்வையில் கண்டவண்ணம் நாளுக்கு நாள் முன்னேறி வருவதை அறிந்துகொள்ள நடப்பவைகளைக் கண்காணிப்பதற்கு சதாராவிற்கு தனது மிகவும் நம்பிக்கைக்குரிய சீடர்களைப் பிரதிநிதிகளாக நியமனம் செய்தார். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் 1980 முதல் 1985 வரை கட்டுமானப் பணியில் கண்ணும் கருத்துமாய் ஈடுபட்ட திரு. கண்ணன் அவர்கள் ஆவார்.

திரு. கண்ணன் அவர்களின் சகோதரியின் புதல்வர்களான திரு. எஸ். ராமமூர்த்தி, திரு. எஸ்.குருமூர்த்தி அவர்களும் அவர்கள் குடும்பத்தினரும் திருக்கோயிலின் வளர்ச்சிக்கு அன்று முதல் இன்றுவரை பேராதரவு நல்கி வருகின்றனர். இக்குடும்பத்தினர் மகாசுவாமிகளின் அனுக்கிரஹத்திற்குப் பாத்திரமானவர்கள். கோவில் கட்டுமாணப்பணி முடிவடைந்த பின்னர் 1985 முதல் கோயில் நிர்வாகப்பணி மற்றும் அதன் ஆராதனைகள் போன்ற செயல்பாடுகளுக்கும் 1985 முதல் அவரது இளம் சீடரான ஸ்ரீ ஜகதீஷ் பட் அவர்களிடம் மாகாசுவாமிகள் மேலாண்மைப் பொறுப்பை ஒப்படைத்தார். அன்று முதல் இன்றுவரை சேவை மனப்பாங்குடன் தனது கடமையைச் செவ்வனே ஆற்றி வருகிறார். பக்தர்கள் மற்றும் நலவிரும்பிகளின் ஆதரவினாலும் கடுமையான முயற்சிகளினாலும் தங்கு தடையின்றி மகாகும்பாபிஷேகம் பாரம்பரிய சம்ப்ரதாய முறைப்படி 1985ஆம் ஆண்டு ஜுன் மாதம் 9ஆம் நாள் மகாஸ்வாமிகளின் ஆசிகளுடனும் இறைவனின் திருவருளுடனும் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

ஸ்ரீ உத்தர சிதம்பரம் நடராஜர் திருக்கோயில் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஸ்ரீ உத்தர சிதம்பரம் நடராஜர் திருக்கோவில் இந்தியக் கோவில்களின் வரைபடத்தில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. பிப்ரவரி 2010இல், கோவில் அதன் வெள்ளி விழாவைக் கொண்டாடியது. மிகப்பெரிய நிதி கட்டுப்பாடுகள் பொருட்டின்றி, சதாரா கோயில் அதன் வரலாற்றில் முதல் முறையாக பெரும் மகிழ்ச்சி அடைந்தது. அதிருத்ர யாகம் மற்றும் சதசண்டி ஹோமம் 11 நாட்கள் தொடர்ந்து செய்ய இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் வசித்து வந்த 2000க்கும் மேற்பட்ட வேத வித்தகர்கள் வரவழைக்கப்பட்டனர். இவை அனைத்தும் நடைபெற முழு முதற்காரணமாகத் திகழ்ந்தவர் மகாஸ்வாமிகள் என தனது மனமார்ந்த நன்றியை திரு ஜெகதீஷ் பட் அவர்கள் அவருக்குக் காணிக்கையாக்கினார்

கோயில் நிறுவனர் மற்றும் தொலைநோக்குத் தெய்வீகக் காட்சியினால் சிதம்பரத்திற்கு வெளியே மற்றொரு நடராஜர் கோவில் நிறுவ வேண்டும் என்ற அவரது கனவு ஐம்பது சகாப்தங்களுக்குப் பின்னர் அவர் மதப் பிரசாரத்திற்காகச் சதாரா சென்றபோது 1979ஆம் ஆண்டு நிறைவேறியது.
சதாராவை நோக்கி ஏப்ரல் 1983ல் விதி சென்றடைய ஷாமன்னா ஷன்பக் அவர்கள் இறைவனின் திருவடியை அடைந்தார். தெய்வத்திருப்பணிக்கு மட்டுமேத் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட மக்கள் வாழ்ந்த ஒரு நாடு உண்டெனில் அது மகாராஷ்டிராதான் என அறுதியிட்டுக் கூறலாம். கோவில் திருப்பணிகளுக்கும் நாமசங்கீர்த்தனம் செய்வதற்கும் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட சாதுக்கள் பலர் வாழ்ந்த பூமி பண்டரிபுரமும் சதாராவும் என்று சொன்னால் அது எள்ளளவும் மிகை ஆகாது.

1933 சிதம்பரத்திற்கு வெளியே மற்றொரு நடராஜர் ஆலயம் அமைக்க வேண்டும் எனும் தெய்வீகப் பார்வையை பெறுகிறார்.
1979 ஐந்து சகாபதங்களுக்குப் பின்னர், மகாசுவாமிகள் அவரது தொலை நோக்குப் பார்வையில் கண்ட காட்சியினை நிறைவேற்றினார்.
1980 ஜூலை ‘‘ஸ்ரீ மகாசுவாமிகள் விஷ்ராம்க்ருஹா’’ கட்டப்பட்டது.
1980 அக்டோபர் 19 திருக்கோவிலின் தளத்தின் பூமிபூஜை இடம்பெற்றது.
1983 ஏப்ரல் : விதி ஷாமன்னாவை இழக்கச் செய்தது.
1985 ஜுன் 9 மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.
1989 மார்ச் : மஹாசிவராத்திரி நாட்டியாஞ்சலி மகோற்சவம் அறிமுகம்
1990 ஜூன் : தவஜஸ்தம்பம் (கொடிக்கம்பம்) பிரதிஷ்டாபனம்.
1991நவம்பர் : ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வருகை.
1993 அக்டோபர்: ஸ்ரீ ஆனந்த நடராஜரின் ஆனந்த நடனக் கலையின் அம்சமான 108 காரணங்களும் சிற்ப சாஸ்திர முறைப்படி செதுக்கப்பட்டன.
1994 ஜனவரி : மகாசுவாமிகளின் பாதுகை ஸ்தாபனம் செய்யப்பட்டது
1997 ஜனவரி : பிரவேஷ்திவார் திறப்பு விழா இடம் பெற்றது.
1997 ஜூலை : சங்கரா ஹால் கட்டுமானப்பணி நிறைவுபெற்றது.
2000 டிசம்பர் : ஸ்ரீ ஐயப்பன் மந்திர் பூமிபூஜை நடைபெற்றது.
2001 ஜூலை : சுவாமி ஐயப்பன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
2003 ஜனவரி 27 மறுசீரமைப்பு மற்றும் இரண்டாவது மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.
2003ஆம் ஆண்டு முதல் ரதோற்சவம் ஆருத்ரா (திருவாதிரை) நட்சத்திரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
2007 ஜனவரி : குடிநீர் தொட்டி திறப்புவிழா இடம் பெற்றது.
2009 ஜனவரி : ரிக்வேதம் ஜடபாராயணம் நடைபெற்றது.
2009 டிசம்பர்: நடராஜ கலாகிரீட சன்ஸ்க்ருதிக் பிரதிஷ்தான் துவக்கம்.
2010 பிப்ரவரி : அதிருத்ர மற்றும் சதசண்டி யக்ஞம் நடைபெற்றது.
வெள்ளிவிழாக் கொண்டாட்டங்கள் இடம்பெற்றன.
2010 பிப்ரவரி 1: ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி கலாமந்திர் துவங்கப்பட்டது.
2010 பிப்ரவரி 12 : கோசாலை நிர்மாணிக்கப்பட்டது.
2010 அக்டோபர் : பாகவத சப்தாஹம் ஆரம்பிக்கப்பட்டது.
2011 பிப்ரவரி: இணையதளத்தைத் துவக்கியது.


இம்மீச் சிறுத் தகவல் தொகுப்பினை வரிவடிவில் படைக்கும் வாய்ப்பினை எனது 60ஆம் வயது முடியும் தருவாயில் நல்கிய எல்லாம் வல்ல நடராஜப் பெருமானின் திருவருளுக்கும் ஜகத்குரு மகாசுவாமிகளின் பாதார விந்தங்களைப் பணிவன்புடன் வணங்கி நடராஜ பெருமானின் திருப்பாதக் கமலங்களில் அர்ப்பணம் செய்கிறேன்.

பத்தராய் பணிவார்கள் எல்லாருக்கும் அடியேன்
பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்
சித்தத்தை சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்
திருவாரூப் பிறந்தார்கள் எல்லாருக்கும் அடியேன்
முப்போதும் திருமேனி தீண்டுவார்க்கு அடியேன்
முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்
அப்பாலும் அடிசார்ந்தார் அடியார்க்கும் அடியேன்
ஆரூரன் ஆரூடின் அம்மானுக்கும் ஆளே!!

முனைவர் வெ.வசந்தா.

எழுதியவர் : முனைவர்.வெ.வசந்தா. (2-May-18, 9:31 pm)
சேர்த்தது : vasantham52
பார்வை : 92

மேலே