ஆசைகளும் ஆசையாக அவளுக்காக காத்திருக்கின்றனவே

உன் மடி மீது தலை சாய்த்து ....
உன் விரல்கள் என் தலை கோதி கதை கேட்க ஆசை ....
உன் புன்சிரிப்பினில் விழும் கன்னக்குழியில் ......விழுந்து விட ஆசை .......

நீ தூங்கும் போது உன் மார் மீது..
என் தலை வைத்து நான் தூங்க ஆசை .......
உன் கருங்கூந்தல் தினம் தினம் கோதிவிட ஆசை
உன்னிடம் இருந்து நெற்றி முத்தம் தினம் வாங்க ஆசை ......
.ஆசைகளை எல்லாம் உன்னிடம் நான் சொல்ல ஆசை .....
கவலைகளை மறந்து கன்னி உன் முகம் பார்க்க ஆசை ....
என் ஆசைகள் எல்லாமே கனவாகிடாமல் நனவாக ஆசை .....

உனக்காக காத்திருக்கும் உன்னில் ஒருவன் இவன் .......
இவன் ஆசைகளுக்கு முகவரி வழங்கிட வருவாயா ??????
என்னவளே ...........

எழுதியவர் : saeel nashy (2-May-18, 10:04 pm)
சேர்த்தது : Saeel Nashy
பார்வை : 566

சிறந்த கவிதைகள்

மேலே