நீ இம்மண்ணுக்கு பெருமை

நாட்கள் பிறப்பதும்
நாளை வருவதும்
புதிதல்ல ........!
''நீ இன்றைக்கான புதுமை ''

மழை வருவதும்
மண் நனைவதும்
புதிதல்ல ...!
''நீ இம்மண்ணுக்கு பெருமை''

கண் திறப்பதும்
காட்சி கிடைப்பதும்
புதிதல்ல ..............!
''நீ காட்சியான கவிதை ''

தீ எரிப்பதும்
நீர் அணைப்பதும்
புதிதல்ல ....!
''நீ இரண்டும் ஆனா பொறுமை ''

வாழ்த்துவதும்
வீழ்த்துவதும்
புதிதல்ல .........!
''நீ வெற்றியை வாழ்த்தி
தோல்வியை வீழ்த்த போகும்
புதுமை ''

எழுதியவர் : பூவிழி (10-Aug-11, 9:02 pm)
சேர்த்தது : poovizhi
பார்வை : 365

மேலே