பணத்தின் மறுபக்கம்

ஒரு பக்கம் உணவின்மை
மறு பக்கம் மனமின்மை
ஒரு பக்கம் தேரோட்டம்
மறு பக்கம் ஆர்பாட்டம்
ஒரு பக்கம் நீரோட்டம்
மறு பக்கம் எதிர்நீச்சல்
ஒரு சாராரில் பாய்ச்சல்
மறு சாராரில் கூச்சல்
ஒரு இடத்தில் மேய்ச்சல்
மறு இடத்தில் கரத்தல்
ஒரு தரம் நிலைமாற்றம்
மறு தரம் உருமாற்றம்
அதிகாரம் பறிக்கும் எங்கு
பரிகாரம் கிடைக்கும்
ஒரு முறை பரிமாற்றம்
மறு முறை தடுமாற்றம்
ஒரு புறம் மகிழ்ச்சிகரம்
மறு புறம் துக்ககரம்
ஒருகதவு திறந்திருக்கும்
மறுகதவு அடைந்திருக்கும்
உள்ளோர்க்கு சொர்ணம்
பணத்தின் ஒரு பக்கம்
இல்லார்க்கு நிவாரணம் "
பணத்தின் மறுபக்கம்"
வலிமை உயர்வின் மடியில்
எளிமை அதன் காலடியில்
பொதுவாக யூகித்தால் இது
பாரத நாட்டின் நிலமை
•••••••
ஆபிரகாம் வேளாங்கண்ணி எழுதிய
பணத்தின் மறுபக்கம்
கவிதைமணியில்