பட்டதாரி

பட்டம் பெற்ற பட்டதாரி
வேலை என்னும் நூலை
ஓடியலைந்து தேடிப்பிடித்து
பறக்கவிட்டாகிட சம்சாரி


நூல் கிடைத்த பாடில்லை
கிட்டுமோ கிட்டாதோ விட்டு
விடுமோ காலைவாரி
கேட்டிடுமோ ஒப்பாரி அவ
நம்பிக்கையில் முகாரி


படிப்பிற்கு பட்டக்கடன்
பெற்றோரின் ஈன்றக்கடன்
யாவும் தீராது போயிடுமோ
தூண்டிலில் சிக்கிய மீனாகி
துடித்திடும் அவலநிலை


கைத்தொழில் ஒன்றைக்
கற்றுக்கொள் கவலை 
உனக்கில்லை ஒத்துக்கொள் மந்திரத்தை மனதில் ஏற்றி
உழைக்கும் வேளையில்


தபால்காரன் கடிதம் ஒன்று
நீட்ட பிரித்தான் படித்தான்
படிப்பிற்கேற்ற வேலைகள்
கிடைப்பதில்லை எனிலும்
வேலைக்கேற்ற சம்பளம்
கொடுப்பதில்லை மெல்ல
சிரித்தான் கிழித்தான்
வீசினான் தெருவீதியிலே


பெற்றோர் பட்ட கடன்கள்
அடைந்தது அரவமறியாது
அடமான நகைகள்யாவும்
மீட்டெடுக்கப் பட்டதுவே
நிலபலன்கள் மீண்டும்
வந்து சேர்ந்தும் விட்டதுவே
சுயவேலை பட்டதாரியாக்கி
•••••••
ஆபிரகாம் வேளாங்கண்ணி எழுதிய
" பட்டதாரி"
கவிதைமணியில்.

எழுதியவர் : ஆபிரகாம் வேளாங்கண்ணி (5-May-18, 7:17 pm)
Tanglish : Pattathaari
பார்வை : 114

மேலே