தம்பி

ஆதரவின்றி பிறந்த எனக்கு அக்கா என்ற உறவு அளிக்க வந்த அழகனே
குறும்பாக நீ செய்யும் விளயாட்டுகளினால் என் குழந்தை பருவத்தை இனிக்க வைத்தவனே
நான் பள்ளிக்கு செல்லும் போதெல்லாம் என்னுடன் முதன்முதலாக
கைகோர்த்து நடந்து வந்த கன்னனே
பட்டம் எதுவும் வாங்காமலேயே உனக்கு பாடம் எடுக்க வைக்கும்
ஆசானாய் என்னை அமர்த்தியவனே
நான் அழுகிற வேளைகளில் என் கண்ணீரை துடைத்து
ஆறுதலாய் அடைக்கலம் கொடுத்தவனே
நாம் வறுமையினால் கலங்கியபோது தன் கல்வியை துறந்து
எனக்கு கல்வி செல்வத்தை அளித்த கடவுளே
நாம் தந்தையை காட்டிலும் ஆயிரம் மடங்கு என்னிடம்
அன்புசெலுத்தும் தம்பியே
நீ பாசமாய் பார்த்துக்கொள்ளும் பண்பிற்கு பதிலாக
என்ன நன்றிக்கடனை செலுத்துவேனோ நான் உனக்கு
முள்ளில்லா மலர்களாக மாறி நீ நடக்கும் பாதைகளில் மட்டும் நான் மலர்ந்திரூப்பேனே
நம் இல்லத்தின் இன்பத்திற்கு எல்லாம் இதயமான இளையவனே
உன்னைப்போல் ஒருவன் என் உடன்பிறப்பாய் பிறந்ததற்கு
நான் நாள்தோறும் நன்றி செலுத்துகிறேன் ஆண்டவனுக்கு
அடுத்து வரும் அத்தனை பிறவிகளில் எல்லாம் நீயே
என் சகோதரனாய் வரும் வரம் கேட்கிறேன் இறைவனிடம் !!!






1

எழுதியவர் : M Chermalatha (6-May-18, 12:57 pm)
சேர்த்தது : M Chermalatha
Tanglish : thambi
பார்வை : 455

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே