அவளோ இவள்
திகட்டா தேனின் சுவையோ அவள் !
உருகா தங்க சிலையோ அவள் !
மிரளாதோடும் மானோ அவள் !
என் மனதை வென்ற அவளோ இவள் !
புதிதாய் அவிழ்த்த மலரோ அவள் !
சருகென்னை விளைவித்த மழையோ அவள் !
கன்னெதிரே நடமாடும் மின்னலோ அவள் !
என் சரீரத்தை துண்டாக்கிய அவளோ இவள் !
பிரம்மனின் உளியில் பிறந்த ரதியோ அவள் !
மல்லிகை தோட்டத்தின் முழு மனமோ அவள் !
மயக்கும் கானத்தின் முதல் வரியோ அவள் !
என் மன கரையில் ஒதுங்கிய அவளோ இவள் !
என் நெஞ்சில் வேல் புதைத்த பெண்ணோ அவள்!
உயிர் முற்றும் குடித்த எமனின் இனமோ அவள் !
தாமரை சிரிப்பை கொண்ட தாரகையோ அவள் !
இருதயத்தை தத்தி ஓட வைத்த அவளோ இவள் !
கல் என்னை சிலை செய்த உளியோ அவள் !
இரும்பேன்னை உருக செய்த தீயோ அவள் !
படை சூழ என்னை வென்ற அண்ணமோ அவள் !
எண்ணில் இனி பாதியாய் ஆன அவளோ இவள் !
நூறு கோடி நட்சத்திரத்தின் ஒளியோ அவள் !
சிற்பி தன்னில் தூங்கும் சிறு முத்தோ அவள் !
பனித்துளியால் தேகம் கொண்ட மதியோ அவள் !
தன் மனசிறையில் என்னை கொண்ட அவளோ இவள் !
என் தேகம் உரசி சென்ற இளந்தென்றலோ அவள் !
என் பாதை சென்று முடியும் தேடலோ அவள்!
மழைதரும் கார்மேக குழலோ அவள் !
என் மனதை வென்ற அவளோ இவள் !
--ரேணு