அன்னையர் தினம்
என் தவத்தின் ஆலயம் உன் கருவறை
பத்து மாதம் பத்தியம் இருப்பாய்
பெத்து எடுத்த உடன் தூக்கம் இழப்பாய்
என் பசி போகும் உன் மார்போடு
ஆராரோ நீ பாட.......
என் இமை ரெண்டும் கண்மூட
களைப்பாறும் உன் கண்கள்
கரைந்தோடும் என் துன்பங்கள் ........