காதலி

சுற்ற வைப்பவை விழிகள்
சுவைக்க வைப்பவை இதழ்கள்
பற்ற வைப்பது பார்வை
படர வைப்பவை கைகள்
வற்ற வைப்பது வார்த்தை
வளைய வைப்பது நெற்றி
முற்ற வைப்பது ஆசை
மூழ்க வைப்பது நேசம்!

பாட வைப்பது உருவம்
பசிக்க வைப்பது பருவம்
தேட வைப்பது நுசுப்பு
தெளிய வைப்பது சிரிப்பு
மூட வைப்பது மோகம்
முகிழ்க்க வைப்பது தாகம்
வாட வைப்பது காலம்
வதங்க வைப்பது பாவம் !

சூட வைப்பது கூந்தல்
சுழல வைப்பது நாக்கு
ஆட வைப்பது கன்னம்
ஆழ வைப்பது எண்ணம்
நாட வைப்பது வாசம்
நிறைய வைப்பது பாசம்
ஊட வைப்பது பொய்ம்மை
உறவை வைப்பது இளமை !

நனைய வைப்பது அன்பு
நெகிழ வைப்பது பின்பு
பணிய வைப்பது பாதம்
பதிய வைப்பது வேதம்
தளர வைப்பது காலை
தகிக்க வைப்பது மாலை
வளர வைப்பது பெண்மை
வாழ வைப்பது காதல் !

எழுதியவர் : காஞ்சி கவிதாசன் (14-May-18, 4:36 pm)
சேர்த்தது : RAJA A_724
Tanglish : kathali
பார்வை : 66

மேலே