முத்து இங்கே சிற்பி எங்கே
உலகெல்லாம் கொண்டாட்டம்
அன்னையர் தினம் என்பதால்...
என்னவன் மட்டும் விழி நீர்
கசிகிறான் அன்னையின்
நினைவிடத்தில் ...
அவன் விழி நீர் துடைக்க
என் கரம் பற்றியது
உனக்கென நான்
இருக்கிறேன் என்று ..
அவன் மௌனம் உதிர்த்தது
என்னை பெற்றெடுத்த அன்னையே
விட்டு பிரிந்தாள் ..
நீ மட்டும் உடன் இருப்பாயா என்று ..???
உணர்ந்து கொள்ளடா என் கண்ணே
பிரிந்து செல்லும் மேகமாய் இல்லை
உன்னை விட்டு பிரியா வானாக இருப்பேன் ..
இருப்பவனுக்கோ
ஒரு தாய் மட்டும் தான் சொந்தம் ..
இல்லாதவனுக்கோ
அன்பு வைப்போர் எல்லாம்
ஓர் தாய் தான் ..