காதல் பிறந்தநாள்

காதலி என் கண்மணி
இன்று காதல் பிறந்தநாள் ...
உன் உயிரிலே எனைக் கலந்ததால்
இன்று எனக்கும் பிறந்தநாள் ...
உனக்குநான் சிறுமழலைதான்
இதை என்றும் மறவாதே..
உன் மடியில்நான் இல்லையேல்
கண்களும் உறங்காதே...

காதலி என் கண்மணி
இன்று காதல் பிறந்தநாள்
உன் உயிரிலே எனைக்கலந்ததால்
இன்று எனக்கும் பிறந்தநாள்..

காலையில் விழித்ததும் உன்முகம் தேடுவேன்
காற்றிலே உனைக்கண்டு இதழ்முத்தம் கோருவேன்
கதிரொளிஹதொடுகையில் கரங்களில் ஆடுவேன்
சேலையின் நிழலில்தான்
சொர்க்கமே காணுவேன்

காதலி என் கண்மணி
இன்று காதல் பிறந்தநாள்
உன் உயிரிலே எனைக் கலந்ததால்
இன்று எனக்கும் பிறந்தநாள்..

பூமியில் பிறந்ததுன் நெஞ்சினில் வாழவே
பூவென என் தோள்களில்
பெண்ணுனைச் சூடவே
காலமோ கோலமோ பிரிந்துநாம் தவிப்பது
கண்களில் நீர்த்துளி காதலாய்த் துளிர்ப்பது

காதலி என் கண்மணி
இன்று காதல் பிறந்தநாள்
என்உயிரிலே உனைக் கலந்ததால்
இன்று எனக்கும் பிறந்தநாள்
உனக்குநான் சிறுமழலைதான்
இதை என்றும் மறவாதே
உன் மடியில்நான் இல்லையேல்
கண்களும் உறங்காதே !

எழுதியவர் : காஞ்சி கவிதாசன் (17-May-18, 10:38 am)
சேர்த்தது : RAJA A_724
பார்வை : 78

மேலே