முள்ளிவாய்க்கால்

பார்த்துப் பார்த்து
மனிதம் தின்றது பௌத்தம்.
பட்டாசு கொழுத்தி ஆரவாரம்
உலக மதங்கள் உன்னதம்.

பார்க்கப் பார்க்க
உயிர் குடித்த சிங்களம்.
விருந்து கொடுத்து ரசித்தது
அகிம்சை போற்றும் காந்தீயம்.

உலகம் மூட்டிய பெருந் தீயில்
ஈழம் சூழ்ந்தது கரு மேகம்.
விழுந்து புரண்டு நாடகம்
பதவி சுகத்தில் கட்டுமரம்.

பால்வெளியில் கலந்தது தமிழ் உதிரம்
ஓசோன் கிழித்து நெருப்பாய் உதிரும்.
உணர்வுகள் கலந்து தீ மூழும் -புது
விடியலில் துயரது கடந்துவிடும்.

துரோகத்தை முறியடித்து
உரிமைகள் மீட்க வரும்
தலைவனின் வருகைக்கான காத்திருப்பு
வைகாசி 18.

எழுதியவர் : கனகசபாபதி செல்வநேசன் (18-May-18, 4:47 pm)
Tanglish : mullivaaikkaal
பார்வை : 319

மேலே