யுகம் விற்பனையகம்,

கடைவீதியெங்கும் கல்விக்கூடங்கள் ,
நட்சத்திர விடுதிகளில் வைத்தியசாலைகள் ,
நிலம் இங்கு எப்போதுமே வியாபார மூலம் தான் .

ஆழி சூழ் உலகில் தாகநிவாரண
தண்ணீர் தொழிசாலைகள்,
பிரதான வர்த்தகத்தில் .

விரைவில் விற்பனை தொடங்க ,
காற்று வேட்டையில்
கலியுகம் இப்பொழுது .

தேர்தல் சந்தையில்
சில்லறை வர்த்தகத்தில்
கொள்முதல் செய்த ஓட்டுக்கள் ,
ஒட்டுமொத்த விற்பனைக்கு
ஜனநாயக சந்தையில் .

எழுதியவர் : (18-May-18, 5:26 pm)
சேர்த்தது : சகி
பார்வை : 23
மேலே