அவள்-தென்றல்-அவன்

தென்றலே உருவம் ஏதுமிலா
நீ, அவள் உடலை வருடுகின்றாய்,
உன் வருடலால் ஆனந்தம்
அடைகிறாள் அவள் உளம் குளிர,
நானோ அதைக் கண்டு உளம்
குமுறுகின்றேன், பொறாமையால்;
ஐயோ,இது என்ன அநியாயம்
உன் மென் கரங்களால் நான்
காணமுடியா அக்கரங்களால் அவள்
விரி கூந்தலைக் கோதிவிடுகிறாயோ,
அசைந்திடும் அவள் கூந்தல் பேசுதே !
இது என்ன மணி ஓசை கிண்கிணி என்று,
அவள் கை வளைகளுக்குள் நீ
புகுந்து அதை வீணையின் தந்திகளென
காணா உன் விரல்களால் மீட்டுகிறாயோ!
என் மனம் குமுறுகிறது தென்றலே!
உந்தன் செயல் கண்டு ,
அவளுக்காக காத்திருந்து தவம்
இருக்கிறேன் இங்கு நான்,
அவளை பார்த்தவண்ணமாய் ,
இன்னும் அவள் பார்வையின் நிழல்
கூட என் மீது படவில்லையே ,ஆயின்
உருவமேதுமிலா தென்றலே நீ,
அவளோடு உறவாடி போய்விட்டாய்
என்னத்வம் செய்தாயோ நீ!
தென்றலே !







சுரிங்கிற ரசம்கொண்டு

எழுதியவர் : விஸ்வன்-தமிழ்பித்தன்-வாச (22-May-18, 2:06 pm)
பார்வை : 62

மேலே