மனசாட்சி

குற்றம் புரிந்தவர் யாரும்
மனைவி மக்களிட மிருந்து
தப்பித்துக் கொண்டு விடலாம்
மந்திரம் தந்திரத் திடமிருந்தும்
தப்பித்துக் கொண்டு விடலாம்
காக்கிச் சட்டை யிடமிருந்தும்
தப்பித்துக் கொண்டு விடலாம்
கருப்புச் சட்டையிட மிருந்தும்
தப்பித்துக் கொண்டு விடலாம்
சிறை வாசத்தி லிருந்தும் சற்றே
தப்பித்துக் கொண்டு விடலாம்
மரணப் பிடியிலிருந்தும் சில நேரம்
தப்பித்துக் கொண்டு விடலாம்
கல்லறை வரையிலும் உயிர் பெற
தப்பித்துக் கொண்டு விடலாம்
தம்பி ஒரு நாளும் மனசாட்சியிடம்
தப்பித்துக் கொண்டு விடலாகாது
கொல்லாமல் கொல்லும் ஆயுதம்
எது அது உந்தன் மனசாட்சியே
•••••••
ஆபிரகாம் வேளாங்கண்ணி