எங்கே நிம்மதி

பிறப்பும் இங்கே
பசிப்பும் இங்கே
புசிப்பும் இங்கே
வாழ்வும் இங்கே
இறப்பும் இங்கே இதை
விட்டால் போவோ மெங்கே

உழைப்பும் இங்கே
பறிப்பும் இங்கே
குவிப்பும் இங்கே கொண்டு
போவோம் எங்கே?

சிரிப்பும் இங்கே
அழுகையும் இங்கே
அழுகையில்லா சுகம்
கிடைக்கும் எங்கே?

சந்தோஷம் இங்கே
துயரம் இங்கே
நிரந்தர நிம்மதி
அமையும் எங்கே?

நண்மையும் இங்கே
தீமையும் இங்கே
தீமையில்லா நலம்
விளைவது எங்கே?

காதலும் இங்கே
மோதலும் இங்கே
மோதலில்லா காதல்
வாய்த்திடும் எங்கே?

பொச்சரிப்பும் இங்கே
நச்சரிப்பும் இங்கே இவ்
உச்சரிப்பு அரவேயில்லா
எச்சரிப்பு கிட்டு மெங்கே?
°°°°°°°°
ஆபிரகாம் வேளாங்கண்ணி
( கண்டம்பாக்கத்தான்)

எழுதியவர் : ஆபிரகாம் வேளாங்கண்ணி (23-May-18, 3:26 pm)
Tanglish : engae nimmathi
பார்வை : 98

மேலே